DMIComputer Education
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு For students who sat the Grade 5 Scholarship exam

பரீட்சை முடிந்தது.
அடுத்த படி இதுதான்.

The exam is over.
This is the next step.

அடுத்த சில மாதங்கள்தான் உங்கள் பிள்ளைக்கு கணினியிலும் ஆங்கிலத்திலும் அடித்தளம் அமைக்க சிறந்த காலம். DMI இல் இரண்டையும் தனித்தனியாக, அல்லது ஒன்றாகக் கற்கலாம்.

The months right after the exam are the best window your child will get to build a foundation in computing and English. At DMI you can take either one, or both together.

ஏன் இப்போதுWhy now

பரீட்சைக்குப் பின்னான காலம் வீணாகக் கூடாது

Don't let the months after the exam go to waste

01

பாடசாலைப் பாடத்திட்டத்துடன் இணைந்தது

Built around the school syllabus

எமது கற்கை நெறிகள் பாடசாலைப் பாடத்திட்டத்தை உள்ளடக்கியுள்ளன. வகுப்பில் கற்பது பாடசாலையிலும் நேரடியாகப் பயன்படும்.

Our courses cover what the school syllabus requires, so what your child learns here shows up directly in schoolwork.

02

சிறுவயதில் ஆரம்பிப்பது வித்தியாசம் காட்டும்

Starting young makes the difference

Micro:bit, Robotics போன்றவற்றை இப்போதே கற்பது அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகியவற்றில் மேலும் ஆராய்வதற்கு அவர்களை உற்சாகப்படுத்தும்.

Learning Micro:bit and robotics at this age is what pushes children to keep exploring science, technology, engineering and maths later.

03

2008 முதல் — ஆறு கிளைகள்

Since 2008 — six branches

யாழ்ப்பாணம், நெல்லியடி, சாவகச்சேரி, கிளிநொச்சி, சுன்னாகம், சண்டிலிப்பாய். British Council IELTS பதிவு நிலையம்.

Jaffna, Nelliady, Chavakachcheri, Kilinochchi, Chunnakam, Sandilipay. An official British Council IELTS registration centre.

கணினிப் பாடநெறிComputer course

நான்கு படிநிலைகள் — JCCS முதல் JCDC வரை

Four levels — JCCS up to JCDC

பாடநெறிகள்The courses

நான்கு படிநிலைகள், நான்கு சான்றிதழ்கள்

Four levels, four certificates

உங்கள் பிள்ளையின் வயதும் முன் அனுபவமும் எந்தப் படியில் ஆரம்பிப்பது என்பதைத் தீர்மானிக்கும். தெரியவில்லை என்றால் கிளைக்கு அழையுங்கள்.

Your child's age and previous experience decide the starting step. If you are unsure, call the branch and ask.

Level 1 JCCS — Junior Certificate in Computer Science
1படிLEVEL

கணினி விஞ்ஞானம் — அடிப்படைச் சான்றிதழ்

Junior Certificate in Computer Science

கணினியை முதன்முதலில் தொடும் பிள்ளைக்கு. இங்கிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும்.

For a child touching a computer for the first time. This is where everyone starts.

பாட அலகுகள்Modules
  • Introduction to Computer
  • Introduction to Windows
  • MS Word
  • Google Docs
  • MS Excel
  • Information Technology
  • edclub
  • Scratch
  • Mathematical Games
  • Coding
இதன் பயன்What they gain

கணினியைத் தன்னந்தனியாகப் பயன்படுத்தத் தெரியும். பாடசாலை வேலைகளை Word, Excel இல் செய்வார். Scratch மூலம் முதல் நிரலை எழுதுவார்.

They can use a computer on their own, do schoolwork in Word and Excel, and write their first program in Scratch.

Level 2 JCGA — Junior Certificate in Graphic Animation
2படிLEVEL

வரைகலை அசைவூட்டம் — சான்றிதழ்

Junior Certificate in Graphic Animation

வரைவதிலும் உருவாக்குவதிலும் ஆர்வமுள்ள பிள்ளைக்கு. இங்குதான் Robotics ஆரம்பமாகிறது.

For the child who likes drawing and making things. This is where robotics begins.

பாட அலகுகள்Modules
  • Introduction to Computer
  • Introduction to Windows
  • HTML 5
  • MS PowerPoint
  • Canva for Kids
  • AI for Kids
  • ICT School+
  • Micro:bit & Robotics
  • edclub
  • Coding
  • Printing
இதன் பயன்What they gain

தமது சொந்த வடிவமைப்புகளையும் விளக்கக்காட்சிகளையும் உருவாக்குவார். முதல் இணையப் பக்கத்தை எழுதுவார். Micro:bit ஐ இயக்குவார்.

They design their own graphics and presentations, build a first web page, and make a Micro:bit do what they tell it.

Level 3 JCCP — Junior Certificate in Computer Programming
3படிLEVEL

கணினி நிரலாக்கம் — சான்றிதழ்

Junior Certificate in Computer Programming

உண்மையான நிரலாக்கம் ஆரம்பிக்கும் படி. Python இங்கே கற்பிக்கப்படுகிறது.

The step where real programming starts. Python is taught here.

பாட அலகுகள்Modules
  • Introduction to Computer
  • MS Excel
  • MS Access
  • Visual Basic
  • Python
  • Micro:bit & Robotics
  • ICT School+
  • Coding
இதன் பயன்What they gain

Python இல் தமது சொந்த நிரல்களை எழுதுவார். தரவுத்தளங்களைப் புரிந்துகொள்வார். O/L ICT பாடத்திற்கு வலுவான அடித்தளம் கிடைக்கும்.

They write their own Python programs, understand how databases work, and go into O/L ICT already ahead.

Level 4 JCDC — Junior Certificate in Digital Creativity
4படிLEVEL

இலக்கமுறை ஆக்கத்திறன் — சான்றிதழ்

Junior Certificate in Digital Creativity

உயர்ந்த படி. சொந்தத் திட்டமொன்றை முடித்தே இதை நிறைவு செய்வார்.

The top step. They finish it by completing a project of their own.

பாட அலகுகள்Modules
  • Introduction to Computer
  • Introduction to Animations
  • Graphic Design — Photoshop
  • InDesign
  • HTML
  • JavaScript
  • CSS Bootstrap
  • Coding
  • ICT School+
  • Final Project
இதன் பயன்What they gain

அசைவூட்டமும் வடிவமைப்பும் செய்வார். முழுமையான இணையத்தளமொன்றைக் கட்டுவார். முடிவில் ஒரு திட்டத்தை வழங்குவார்.

They animate, design, build a complete website, and present a finished project at the end.

ComputerCodingMicro:bit RoboticsScratchEdclub
ஏன் இது முக்கியம்Why it matters

இது வெறும் கணினி வகுப்பு அல்ல

This is not just a computer class

பாடசாலைSCHOOL

பாடத்திட்டத்தை உள்ளடக்கியது

Covers the school syllabus

இக்கற்கை நெறிகள் பாடசாலைப் பாடத்திட்டத்தை உள்ளடக்கியுள்ளன. மாணவர்கள் கணினி, மொழி, பொறியியல் சார்ந்த துறைகளில் சிறந்த முறையில் கல்வி கற்க இது உறுதுணையாக அமையும்.

The syllabus taught in school is built into these courses, so they support your child in computing, language and engineering subjects rather than competing with them.

போட்டித்திறன்COMPETE

Robotics நாளைய போட்டிக்குத் தயார்படுத்துகிறது

Robotics prepares them to compete

Robotics மாணவர்களை நாளைய போட்டித்திறனானவர்களாக உருவாக்க உதவுகின்றது. இந்தத் திறன்கள் அவர்களை எதிர்காலத்தில் தனித்துவம் உள்ளவர்களாக மாற்றும்.

Robotics builds the kind of problem-solving that sets a child apart later — and these are skills employers and universities look for.

STEM

சிறுவயதிலேயே ஆர்வத்தைத் தூண்டும்

Curiosity starts early

சிறுவயதிலேயே Micro:bit, Robotics கற்று அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகியவற்றில் மேலும் ஆராய்வதில் அவர்களை உற்சாகப்படுத்தலாம்.

Children who learn Micro:bit and robotics young are the ones who keep asking questions in science, technology, engineering and maths.

ஆங்கிலப் பாடநெறிEnglish course

Cambridge Junior Young Learners — Starters, Movers, Flyers

Cambridge Junior Young Learners — Starters, Movers, Flyers

நான்கு மொழித்திறன்கள்Four language skills

ஒவ்வொரு படிநிலையிலும் நான்கு திறன்களும்

All four skills, at every level

வாசித்தல் — ReadingReading எழுதுதல் — WritingWriting கேட்டல் — ListeningListening பேசுதல் — SpeakingSpeaking
Cambridge Starters — for young beginners
1படிLEVEL
STARTERS

முதல் படி — ஆங்கிலத்துடன் நட்பு

The first step — making friends with English

எழுத்துக்கள், அன்றாடச் சொற்கள், எளிய வாக்கியங்கள். பிள்ளை ஆங்கிலத்தைப் பயமின்றி அணுகக் கற்றுக்கொள்கிறார்.

Letters, everyday words, simple sentences. The child learns to approach English without being afraid of it.

இப்படியில் கற்பவைWhat is covered
  • எழுத்துக்கள் & ஒலிப்பு
  • Alphabet & sounds
  • அன்றாடச் சொற்கள்
  • Everyday vocabulary
  • எளிய வாக்கிய அமைப்பு
  • Simple sentence structure
  • வகுப்பறை உரையாடல்
  • Classroom conversation
  • Fun for Starters
இதன் பயன்What they gain

தன்னைப் பற்றியும் தன் குடும்பம், பாடசாலை பற்றியும் ஆங்கிலத்தில் சொல்லத் தொடங்குவார்.

They can talk about themselves, their family and their school in English.

Cambridge Movers — building stronger skills
2படிLEVEL
MOVERS

இரண்டாம் படி — வாக்கியங்களிலிருந்து கருத்துக்களுக்கு

The second step — from sentences to ideas

காலங்கள், இணைப்புச் சொற்கள், நீண்ட வாசிப்பு. கருத்தைத் தொடர்ச்சியாகச் சொல்லக் கற்கிறார்.

Tenses, connectors, longer reading. They learn to hold an idea across more than one sentence.

இப்படியில் கற்பவைWhat is covered
  • Grammar Structure
  • Grammar structure
  • காலங்கள் (Tenses)
  • Tenses
  • சொற்களஞ்சிய விரிவாக்கம்
  • Wider vocabulary
  • கதை வாசித்தல்
  • Story reading
  • Fun for Movers
இதன் பயன்What they gain

சிறு பந்திகளை எழுதுவார், கேட்டதைப் புரிந்து பதிலளிப்பார், பாடசாலை ஆங்கிலப் பாடத்தில் முன்னிலை பெறுவார்.

They write short paragraphs, understand and answer what they hear, and pull ahead in school English.

Cambridge Flyers — step up with confidence
3படிLEVEL
FLYERS

மூன்றாம் படி — சுயமாகப் பயன்படுத்தும் ஆங்கிலம்

The third step — English they own

YLE இன் இறுதிப் படி. இதன் பின் KET, PET, IELTS வரையிலான பாதை திறக்கிறது.

The top of the Young Learners ladder. From here the path to KET, PET and IELTS is open.

இப்படியில் கற்பவைWhat is covered
  • மேம்பட்ட Grammar
  • Advanced grammar
  • கட்டுரை எழுதுதல்
  • Composition writing
  • நீண்ட Listening
  • Extended listening
  • Speaking பரீட்சைப் பயிற்சி
  • Speaking test practice
  • Fun for Flyers
இதன் பயன்What they gain

ஆங்கிலத்தில் தன்னம்பிக்கையுடன் உரையாடுவார். O/L, A/L ஆங்கிலத்திற்கும் அடுத்த Cambridge பரீட்சைகளுக்கும் தயாராவார்.

They hold a conversation in English with confidence, ready for O/L and A/L English and for the next Cambridge exams.

இதற்குப் பின்What comes after

Flyers இல் முடிவதில்லை

It does not stop at Flyers

Young Learners மூன்று படிநிலைகளும் Cambridge இன் அடுத்த பரீட்சைகளுக்கு நேரடி அடித்தளம். அதே DMI ஆசிரியர்களுடன் அதே கிளையில் தொடரலாம்.

The three Young Learners levels lead straight into Cambridge's next exams — and your child continues with the same DMI teachers at the same branch.

Starters YLE — படி 1
Starters YLE — step 1
Movers YLE — படி 2
Movers YLE — step 2
Flyers YLE — படி 3
Flyers YLE — step 3

Cambridge ஆங்கில Key பரீட்சைக்கான கற்றல் நெறியானது நான்கு மொழித் திறன்களின் அடிப்படையில் மாணவர்களைத் தொடர்ந்தும் உயர்நிலைப் பரீட்சைகளுக்குத் தயாராக்குகிறது — தொடர்ந்து PET மற்றும் IELTS பரீட்சைகளுக்கும் இது அடிப்படையாக அமைகிறது.

Each level is built on the same four skills, so a student who finishes Flyers is already prepared for KET, and from there for PET and eventually IELTS.

Cambridge English Key (KET) — open doors to your future
Flyers முடித்தவுடன் அடுத்த இலக்கு — Cambridge Key English Test.
The next target once Flyers is done — the Cambridge Key English Test.
ஏன் DMIWhy DMI

ஐந்து காரணங்கள்

Five reasons

01

Cambridge பாடத்திட்டத்தின் அடிப்படையில்

Built on the Cambridge syllabus

இப் பாடத்திட்டம் Cambridge பாடத்திட்டத்தின் அடிப்படையில், Grammar Structure, சொற்களஞ்சியம் மற்றும் மொழித்திறன்களை வளர்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

The course follows the Cambridge syllabus, developing grammar structure, vocabulary and language skills in a set order.

02

Cambridge பரிந்துரைத்த நூல்கள்

Cambridge-recommended books

Cambridge University ஆல் பரிந்துரைக்கப்பட்ட Handbook, Workbook மற்றும் Grammar Exercise Book பயன்படுத்தப்படுகின்றன.

We teach from the Handbook, Workbook and Grammar Exercise Book recommended by Cambridge University — not photocopied notes.

03

தகைமையான ஆங்கில ஆசிரியர்கள்

Qualified English teachers

DMI இன் தனித்துவமான ஆங்கில ஆசிரியர்கள் ஊடாக ஒவ்வொரு படிநிலையும் கற்பிக்கப்படுகின்றது. பாடசாலையில் O/L, A/L பயிலும் மாணவர்களுக்கும் இது பயனுள்ளதாக அமைகிறது.

Every level is taught by DMI's own English teachers, and the same grounding carries students through O/L and A/L English at school.

04

மாதாந்தப் பரீட்சைகள்

Monthly exams

நன்கு திட்டமிடப்பட்ட பயிற்சிகளும் மாதாந்தப் பரீட்சைகளும் நடத்தப்படுகின்றன. பிள்ளையின் முன்னேற்றத்தை நீங்கள் அறிந்துகொள்ளலாம்.

Planned exercises and a monthly test, so you can see where your child actually stands instead of guessing.

05

British Council முறைக்கு ஏற்ப வழிகாட்டல்

Guided the British Council way

British Council பரீட்சை முறைகளுக்கு ஏற்ப சிறப்பு வழிகாட்டல் வழங்கப்படுகின்றது. DMI ஒரு அதிகாரபூர்வ British Council IELTS பதிவு நிலையம்.

Exam guidance follows British Council procedure — DMI is an official British Council IELTS registration centre.

Cambridge பாடத்திட்டம்Cambridge syllabus அனுபவமிக்க ஆசிரியர்கள்Experienced teachers நிரூபிக்கப்பட்ட பெறுபேறுகள்Proven results சர்வதேச அங்கீகாரம்Internationally recognised

புதிய பிரிவுகள் ஆரம்பம்

New batches start

ஒவ்வொரு பிரிவும் காலை 9.30 மற்றும் மாலை 3.30 — இரு நேரங்களில்

Every batch runs twice daily — 9.30 am and 3.30 pm

  • 11/8செவ்வாய்Tue
  • 15/8சனிSat
  • 18/8செவ்வாய்Tue
  • 22/8சனிSat
  • 24/8திங்கள்Mon
எமது கிளைகள்Our branches

ஆறு கிளைகள். உங்களுக்கு அருகில் ஒன்று.

Six branches. One of them is near you.

கிளைக்கு நேரில் வாருங்கள், அல்லது கீழுள்ள இலக்கத்திற்கு அழையுங்கள்.

Walk in to any branch, or call the number below it.

யாழ்ப்பாணம்Jaffna இல. 113, கன்னாதிட்டி வீதி (சயின்ஸ்ஹோல் அருகாமை) No. 113, Kannathiddy Road (near Science Hall) 021 222 4403
நெல்லியடிNelliady M.M.V வீதி (மத்திய மகா வித்தியாலயம் அருகில், காளி கோயில் முன்பாக) M.M.V Road (near Central College, opposite Kali Kovil) 021 226 2470
சாவகச்சேரிChavakachcheri கண்டி வீதி (HNB வங்கி அருகில்) Kandy Road (near HNB Bank) 021 227 0775
கிளிநொச்சிKilinochchi A9 வீதி, ஆனந்தபுரம் (மத்திய கல்லூரி மைதானம் முன்பாக) A9 Road, Anandapuram (opposite Central College grounds) 021 228 5655
சுன்னாகம்Chunnakam இல. 273, கே.கே.எஸ். வீதி (சதொச மேல்மாடி) No. 273, K.K.S. Road (above Sathosa) 021 224 1970
சண்டிலிப்பாய்Sandilipay சீரணிச் சந்திSeerani Junction 021 225 6665

இடங்கள் மட்டுப்படுத்தப்பட்டவை

Seats are limited

எந்தப் பாடநெறி பொருத்தமானது என்று தெரியவில்லையா? அழையுங்கள் — உங்கள் பிள்ளையின் தரத்திற்கு ஏற்ற படிநிலையைச் சொல்கிறோம்.

Not sure which course fits? Call us and we will tell you the right level for your child's age and grade.

0777 17 35 17